tamilnadu

img

ரூ. 2029 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அதானியைக் காப்பாற்றும் இந்திய அதிகாரிகள்

ரூ. 2029 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அதானியைக் காப்பாற்றும் இந்திய அதிகாரிகள்

அமெரிக்க நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

நியூயார்க், ஆக. 13 - அமெரிக்க முதலீட்டாளர்களிட மிருந்து ரூ. 6000 கோடி அளவிற்கு பெற்ற பணத்திலிருந்து, முறைகேடான வகையில், அதிகாரிகளுக்கு ரூ. 2029 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக, 2024 நவம்பரில் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கில், கவுதம் அதானிக்கு சம்மன் அனுப்பாமல் இந்திய அதிகாரி கள் தாமதிப்பதாக நியூயார்க் நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதி காரிகளுக்கு அதானி ரூ. 2029 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் எனவும், இதன் மூலம் தனது பங்கை உயர்த்திக் காட்டி முதலீட்டாளர்களையும் ஏமாற்றி யுள்ளார் எனவும் கண்டறியப்பட்டது.  இந்த விவகாரம் உலகம் முழுவதும்  பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.  இது குறித்து நியூயார்க் நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் அமெரிக்க பங்குச் சந்தை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்த னை ஆணையம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், அதானிக்கு, சம்மன் அனுப்பாமல் இந்திய அதிகாரி கள் தாமதம் செய்வதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. மேலும் சம்மன் அனுப்பா மல் தாமதிக்கும் இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதானிக்கு முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையை ஏற்று நியூயார்க் நீதிமன்றம் வரும்நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.