இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடம் மோடியின் அடுத்த பொய் - அ.சவுந்திரராசன் விமர்சனம்
சேலம், ஆக. 25- இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடம் என மோடி கூறு வது பொய் எனவும், இந்திய பெரு முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவ னங்களுமே முன்னேறியுள்ளன, மக்கள் வாழ்வாதாரத்தில் முன் னேற்றம் இல்லை. இந்த வளர்ச்சி என்பது மக்களுக்குத் துன்பத் தையே தருகிறது என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்திரரா சன் விமர்சித்தார். சேலத்தில் நடைபெற்ற இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 14 ஆவது மாவட்ட மாநாட்டு பொதுக் கூட்டத்தில் அ.சவுந்தரராஜன் மேலும் பேசுகையில், மோடி அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் அத் தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டு மக்கள் பொருளா தார பாதிப்பைச் சந்தித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட் டது. ஒன்றிய அரசின் நிபந்தனை களால் மாநில அரசுகள் பாதிக்கப் படுகின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 50% மின்கட்டணம் உயர்த்தப்பட் டுள்ளது. இதனால் சிறு, குறு தொழில்கள் நசுங்கி மூடப்பட்டு வரு கின்றன. முறைசாரா தொழிலாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரு கின்றனர். தொழிலாளி தன் அத் தியாவசியத் தேவைகளைத் தாண்டி எந்தப் பொருளையும் வாங் கும் சக்தி இல்லாமல் உள்ளார், இத னால் நாட்டின் வாங்கும் திறன் குறைந்து வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலை உள்ளது. டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்களில் கூட ஊழி யர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப் படுகின்றனர். குறைந்தபட்ச ஊதி யம் ரூ. 26,000 வழங்கப்பட வேண் டும். இங்கே தூய்மைப் பணியாளர் களுக்குக் கூட ஒரு நாள் கூலி ரூ. 140 மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் அற்ப சம்பளத்திற்குத் தற் காலிகப் பணியில் உள்ளனர். பெரிய நிறுவனங்களும் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளில் தொழி லாளர்களைச் சுரண்டுகின்றன. உழைப்பின் விலையை முதலா ளியே நிர்ணயிக்கும் போக்கு கண் டனத்திற்குரியது. வெளிமாநிலத் தொழிலாளர்களை எதிரியாகச் சித் தரிக்கும் செயலை சிலர் செய்து வரு கின்றனர். அவர்கள் வாழ்வாதாரத் தேவைகளுக்காகவே இடம்பெயர் கின்றனர். ஸ்டாலின் விடியல் பயணம் பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. ஆனால் போக்குவ ரத்துத் துறையை தனியாருக்குக் கொடுத்தால் இலவசப் பயணங் கள் கிடைக்காது. தமிழக அரசின் கீழ் உள்ள 10,000 பேருந்துகள் நஷ் டத்தில் இயங்குவது பொதுமக்க ளுக்குப் பயன்படுவதால்தான். தனி யாருக்குச் சென்றால் முதலாளி கள் இதை ஏற்க மாட்டார்கள். தொழிற்சங்க உரிமைகளை எந்த நிறுவனமும் அமல்படுத்துவ தில்லை. சாம்சங் போராட்டத்தில் 37 நாட்களுக்குப் பிறகே தமிழக அரசு தொழிற்சங்கச் சான்றிதழ் வழங்கி யது. நடிகர் விஜய் சினிமா வயக் காட்டில் மேய்ந்த குதிரை, அவரது மாநாட்டு உரையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் சம்பந்தமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. மோடி அரசால் கொண்டுவரப் படும் குற்றவியல் சட்டம் உள்ளிட்ட அபாயகரமான சட்டங்கள் கிழித் தெறியப்பட வேண்டும். குற்றங்கள் செய்யாமலேயே சூழ்ச்சியால் தண்டனை வாங்கித் தரும் வகை யில் இந்தச் சட்டங்கள் உள்ளன. தொழிற்சாலைகளில் காண்ட்ராக்ட் முறை, ஒப்பந்த முறை, அவுட்சோர் சிங் முறையை ஒழிக்க வேண்டும். மோடியை எதிர்க்க தமிழக அரசுக்கு நாம் ஆதரவு அளித்தாலும், தொழி லாளிகளுக்கு எதிராகச் செயல் பட்டால் போராட்டக்களத்தைச் சந் திக்க நேரிடும். தொழிலாளர்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி அவற்றை தீர்க்க வேண் டும். “12 மணிநேர வேலை என்கிற மசோதாவை: நிறுத்தி வைப்பது போதாது. அதை அடியோடு கைவிடவேண்டும் என்றார்.