புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளிகளைக் கைது செய்க இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்
புதுச்சேரி, அக்.23 புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பாலியல் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி மத்திய பல் கலைக்கழக காரைக்கால் கிளையில் மாணவி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் மாத வையாவைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடை பெறும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரியும், போராடிய மாணவர்களை காவல்துறையை வைத்துத் தாக்கிய பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டி த்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி காலாப் பேட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநில செயலா ளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம், எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சிபிஐ தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டி யன், புதுச்சேரி மாநில செயலாளர் சலீம், விசிக மாநில செயலாளர் தேவ. பொழிலன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் ஆகி யோர் கண்டன உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி களின் சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைவர்கள், தொண்டர்கள், பெண்கள், மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றிய பாஜக அரசு பல்கலைக்கழகங்களைக் காவிமயமாக்கி மாண வர்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடு கின்றவர்களைப் பாது காக்கும் செயலைக் கண்டி த்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
