tamilnadu

img

நூறு நாள் வேலையில் கூலியை உயர்த்தி வழங்குக! மாதர் சங்க தஞ்சாவூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

நூறு நாள் வேலையில் கூலியை உயர்த்தி வழங்குக!  மாதர் சங்க தஞ்சாவூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.20 -  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் தஞ்சை மாவட்ட 17 ஆவது  மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில்  ஆக.18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சங்க மாவட்ட பொறுப்புத் தலைவர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கஸ்தூரி பாய் கொடியேற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி அஞ்சலி  தீர்மானம் வாசித்தார். தஞ்சை ஒன்றியச்  செயலாளர் எஸ்.வனரோஜா வரவேற் றார். அகில இந்திய துணைத் தலைவர் பி. சுகந்தி துவக்கவுரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் இ.வசந்தி வேலை அறிக்கை, மாவட்டப் பொருளா ளர் என்.வசந்தா வரவு-செலவு அறிக்கை  வாசித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் வாழ்த்திப் பேசி னார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி பேசினார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா நிறைவுரையாற்றினார். தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் சி.சரிதா நன்றி கூறினார்.  மாவட்ட நிர்வாகிகள், இடைக்குழு உறுப்பினர்கள், வரவேற்புக்குழு தலை வர் எஸ்.கோவிந்தராசு, பொருளாளர் எம். தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக, திங்களன்று மாலை வல்லம் பெரியார் சிலையில் இருந்து பேர ணியாகச் சென்று, அண்ணா கலைய ரங்கத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்வு  மாவட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவ ராக இ.வசந்தி, செயலாளராக பி.கலைச் செல்வி, பொருளாளராக பி.மேரி, துணைத் தலைவர்களாக தமிழ்செல்வி, கலைச்செல்வன், துணைச் செயலாளர் களாக அம்சவள்ளி, சுமதி உள்ளிட்ட 23  பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது.  நூறு நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து கூலியை உயர்த்தி வழங்க  வேண்டும். வீட்டுமனைப் பட்டா, இலவச வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.