போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக. 23- கோரிக்கைகளை வலியு றுத்தி, கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நியா யமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களின் போராட்டத்தில் அடக்கு முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில், சனிக்கிழமை டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ராஜு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன், மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், எஸ்இடிசி மாநிலத் தலைவர் அருள், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் கணேசன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் பழனி யாண்டி, மின்துறை பொறி யாளர் அமைப்பு மாநில துணைத் தலைவர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். கரூர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு கரூர் மாவட்ட குழு சார்பில், திருமாநிலையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட த்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.ஆர். ராஜாமுகமது தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், போக்கு வரத்து கழக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வி. பாலசுப்ரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் சி.முருகேசன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.தனபால், தள்ளுவண்டி தரைக் கடை சங்கச் செயலாளர் தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஹேச்சுமின், ப.சரவணன், எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.