மதுரை
தமிழகத்தில் மதுரை, சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் நாளை முதல் நான்கு, ஐந்து தினங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வெள்ளிக்கிழமை இ-பாஸ் பெற ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 1,000 பேர் திரண்டு சமூக விலகலை முறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சனிக்கிழமை மதுரையில் வழக்கம் போல் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு அமலில் இல்லை. செயின்ட் மேரீஸ் சர்ச் பகுதி, கீழமாசிவீதி, காளவாசல், பீ.பீ.குளம், பெத்தானியாபுரம், புதூர், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதியில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுவிட்டதோ என்று எண்ணுமளவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையின் பல பகுதிகளில் பொருட்கள் வாங்க கி.மீ., கணக்கில் வரிசையில் காத்திருந்தனர்.