tamilnadu

img

பாஜகவை துடைத்தெறியும் பொறுப்பு தமிழக, கேரள மக்களுக்கு உண்டு

கண்ணூர், நவ.30- 2024 மக்களவைத் தேர்த லில் பாஜகவை நாட்டில் இருந்து துடைத்தெறிய வேண்டிய பெரிய பொறுப்பு தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு உள்ளது என கண்ணூர் பல்கலைக்கழக விழாவில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.  கேரளம் மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழக இலக்கிய விழாவில் தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின்  பேசியதாவது:  கூட்டாட்சி அமைப்பின் கண்ணியத்தை குலைக்கும் ஆளுநர்களின் குறுக்கீடு தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் சந்திக்கும் பிரச்சனை. அர சியல் எதிரிகளை வேட்டை யாட அமலாக்க இயக்கு நரகத்தைப் பயன்படுத்து வதன் மூலம், நாட்டின் சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளின் நம்ப கத்தன்மை பாதிக்கப் பட்டுள்ளது. மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்கு உதவும் திட்டங் களை உருவாக்க வாய்ப் பளித்து, ஒன்றிய அரசு மாநி லங்களுக்கு உதவ வேண்டும். ஆளுநர்களை பயன்படுத்தி அரசியல் விளையாடுவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மாநிலங்களும் ஒன்றுக் கொன்று உதவவும் ஒத்து ழைக்கவும் சுதந்திரம் வேண்டும். ஆனால், அதி காரத்தை ஒரே இடத்தில் குவிப்பதே ஒன்றிய அரசின் முயற்சி. கேரளாவும், தமிழகமும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்கும் பாரம்பரியம் கொண்டவை. 2019 தேர்தலில் இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஒரு இடம் கூட பெறாமல் தோல்வி யடைந்தது. இங்குள்ளவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதற்கு இதுவே சான்று. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை நாட்டில் இருந்து துடைத்தெறிய வேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது.  இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசி னார்.