tamilnadu

img

பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக

பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக

மாணவர் சங்க ஈரோடு மாநாட்டில் தீர்மானம்

ஈரோடு, ஆக. 2- பள்ளி, கல்லூரிகளில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாணவர் சங்க ஈரோடு மாவட்ட மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 21 ஆவது மாநாடு,  தோழர் டி.பி.முத்துசாமி நினைவ கத்தில் சனியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் த.நவீன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ப.பரத் பாசு வரவேற்றார். மாநில துணைத் தலைவர் தே.சரவணன் மாநாட்டை  துவக்கி வைத்து உரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் வி.ஏ.விஸ்வநாதன், மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் பா.லலிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், ஈரோடு மாவட்டத்தி லுள்ள பள்ளி, கல்லூரிகளில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஈரோட்டில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் பெருந்துறை தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை  விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து வசதியை உறுதிப்ப டுத்த வேண்டும், உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவராக பூ. தசரதன், செயலாளராக த.நவீன், துணைத்தலைவர்களாக சரண்யா,  அச்சுதன், துணைச்செயலாளர்க ளாக கதின்பாண்டி, ஸ்ரீகோகுல கிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சா.பிரவீன்குமார் நிறைவுரையாற்றினார்.