tamilnadu

மூளையில் நீர்கோர்ப்பு மதுரை அரசு மருத்துவமனை சாதனை

மதுரை:
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவருக்கு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளை ரத்தக்குழாய் வீக்கம் மற்றும்இரத்தக்கசிவு (Ruptured brain Aneurysm ) ஏற்பட்டு இரண்டு மாதத்திற்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . பின் அவரது மூளையில் அதிகநீர்க்கோர்ப்பு (Hydrocephalus) ஏற்பட்டு மேலும் இருமுறை அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் அவர் உயிருக்கு  ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி,செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் நீர்க்கோர்ப்பு மிக அதிகஅளவு ஏற்பட்டு மூளையில் நீர் அழுத்தம் அதிகமாக (Brain edema) உள்ளதைமருத்துவர்கள் உறுதி செய்தனர். அரசு இராஜாஜி மருத்துவமனை முதன்மையர் சங்குமணி,  நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் வீரபாண்டியன் ஆகியோரின் ஆலோசனையோடு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மணிமாறன், பிரசாத்ஆகியோர் நோயாளியின் மூளை நீர்க்கோர்ப்பை சரிசெய்யும் அறுவை சிகிச்சையை (குழாய் மூலம் மூளை நீரை வெளியேற்றுதல் (External ventricular drainage)) மேற்கொண்டனர்.தற்போது அந்தப் பெண்ணிற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனா தொற்று மற்றும் மூளைப் பிரச்சனைக்கான சிகிச்சைகள் ஒருங்கே வழங்கப்பட்டு வருகிறது. 

;