சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்
கோவை, பிப்.17– ஊழலற்ற நிர்வாகத்தை நடத்திட கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதி களால் மட்டுமே சாத்தியம். எங்களின் மூலதனமே நேர்மைதான் என கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பெருமிதத்தோடு கூறி னார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவை மாவட்டத் தில் இரண்டு நாட்கள் தேர்தல் பரப்புரை யில் ஈடுபட்டார். சூலூர் சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி, ஆனைமலை, அன்னூர், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும், கோவை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 47 ஆவது வார்டு இரா.செல்வம், 12 ஆவது வார்டு வி.இராமமூர்த்தி, 13 ஆவது வார்டு சுமதி, 24 ஆவது வார்டு ஆர்.பூபதி, 28 ஆவது வார்டு கண்ணகி ஜோதி பாசு ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.
இக்கூட்டங்களில் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்த ஆட்சி யில் இருந்த அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இதன் காரணமாக அதிகாரிகளின் துணை யோடு அதிமுகவினர் உள்ளாட்சி நிர்வா கத்தை ஊழல் மலிந்த துறை யாக மாற்றிவிட்டனர். கோடிக்கணக் கான ரூபாய்கள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளன. இதுபோக மக்க ளுக்கு விரோதமான திட்டங்களை நடை முறைப்படுத்தினர். கோவை மாநக ரத்திற்கு தேவையான குடிநீர் சிறுவாணி யில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. இதனை இத்தனை ஆண்டுகாலம் குடிநீர் வடிகால் வாரியமும், கோவை மாநகராட்சியும் இணைந்து வெற்றிகர மாக விநியோகித்து வந்தது. இதில் சில குறைபாடுகள் இருந்தாலும் அத னை உள்ளாட்சி பிரதிநிதிகளுடனோ, அல்லது அதிகாரிகளுடனோ கோரிக்கை வைத்தோ, போராடியோ நிவர்த்தி செய்திருக்கிறோம். ஆனால் கடந்த அதிமுக அரசு கோவை மாநகரத்தின் குடிநீர் விநி யோக உரிமையை சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனத்திடம் வழங்கி யுள்ளது. அவர்கள் இப்போது தீவிர மாக பணிகளை செய்து வருகின்ற னர். சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் விநி யோக திட்டம் நடைமுறைப்படுத்தப் படுமேயானால் பொதுக்குழாய்கள் இருக்காது. குடிநீருக்கான கட்ட ணத்தை அவர்களே நிர்ணயம் செய் வார்கள். வறட்சிக் காலத்தில் குடிநீர் விநியோகம் சாதாரண மக்களுக்கு புறக்கணிக்கப்பட்டு செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே விநியோ கம் செய்யப்படும் என்கிற அபாயம் உள்ளது.
இதனை எதிர்த்து போராட்டக் களம் கண்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர். நாங்கள் பெருமை யோடு சொல்லிக் கொள்வது இந்த சூயஸ் நிறுவனத்தை எதிர்த்த மறியல் போராட்டக் களத்தில் முன்னின்று கைதானவர்கள்தான் கோவை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும். கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் மக்களுடனே இருப்போம் என்பதை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் அனுபவத்திலேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஒரு தொழிலை செய்வதற்கு பொருளாதார மூலதனம் வேண்டும். அரசியலை இங்கு கொள்ளையடிப்பதற்கான களமாக மாற்றிக் கொண்டிருக்கிற சூழலில், கம்யூனிஸ்ட்டுகளின் மூலதனமே நேர்மை, நேர்மை, நேர்மை மட்டும்தான் என்பதை நாங்கள் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். ஆகவே ஊழல் மலிந்து கிடக்கிற இந்த உள்ளாட்சி நிர்வாகத்தை நேர்மையோடு நடத்திச் செல்ல, நேர்மையற்ற செயலை எதிர்த்து போரிடுபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள். இது கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே சாத்தியம். அத்தகைய பெருமை வாய்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டுகிறோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் மக்களின் குரலை பேசுகிற, சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றிட உழைத்திடும் மக்கள் பிரதிநிதிகளாக மார்க்சிஸ்ட்டுகள் இருப்பார்கள் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக, இந்த பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட தலைவர்கள், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.