tamilnadu

img

தஞ்சை பெரியகோவிலில் ஹாலிவுட் நடிகர்

தஞ்சாவூர், டிச.8 -  ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸ், தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிற்பங்களையும், கலையும் ரசித்து விட்டு, சாமி தரிசனம் செய்தார். அவெஞ்சர்ஸ், தி அமெரிக்கன் பிரசிடெண்ட்,  தி கேம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் அமெரிக்க நடிகரும், படத் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ். இவர் இரண்டு ஆஸ்கர் விருது, ஐந்து கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.  சமீபத்தில் கோவாவில் நடந்த 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதை பெற்ற மைக்கேல் டக்ளஸ், தனது மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் மகன் டிலானுடன், இந்தியாவில் உள்ள பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், தஞ்சாவூர் பெரியகோவி லுக்கு வந்த மைக்கேல் டக்ளஸ், பெரியகோவி லின் கட்டடக் கலையும், சிற்பங்களையும் பார்த்து ரசித்து, கோவில் குறித்து கேட்டறிந்தார். பின்னர், குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அவருக்கு, கோவில் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.  கோவில் முன்பு குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை மைக்கேல் டக்ளஸ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.