tamilnadu

img

செங்கொடி இயக்கத்தின் போராட்டத்தால் நீதி வென்றது வாச்சாத்தியில் மலை மக்கள் கொண்டாட்டம்

தருமபுரி, செப்.30- செங்கொடி இயக்கத்தின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே வாச்  சாத்தி கொடுமைக்கு எதிராக கிடைத்த  வரலாற்று தீர்ப்பு என தலைவர்கள் தெரி வித்தனர்.  வாச்சாத்தி தீர்ப்பு, 30 ஆண்டுகால  போராட்டத்தின் வெற்றி கொண்டாட்டம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிரா மத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் அம்பு ரோஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில செய லாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.சிசுபாலன், மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மலைவாழ் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லை யன், மாநில துணைச்செயலாளர் கண் ணகி,விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் அரூர் பி. குமார், மொரப்பூர் தங்கராஜ், பாப்பி ரெட்டிபட்டி தனுசின், மலை வாழ் மக்  கள் சங்க நிர்வாகிகள் எஸ்.கே.கோவிந்  தன், ஏ.நேரு, பி.வி.மாது, ஜெயகாந்தன்,  பி.சங்கு, பழனி, விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.தீர்த்தகிரி, மனோகரன், பி.கிருஷ்ணவேணி, சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

நீதியை நிலைநாட்டிய வாச்சாத்தி கிராமம்

இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லி பாபு பேசுகையில், வாச்சாத்தி கிரா மம் உண்மையின் மறுபக்கம். நீதிநிலை நாட்டிய கிராமம். இந்த கிராமம் இயற்கை  சூழ்ந்து விவசாயத்தில் பூத்துக்குலுங் குகின்ற கிராமம். இவர்கள் பாசத்தோடு  அரவணைப்பவர்கள். வாச்சாத்தி பகுதி யில் சந்தன மரத்தை கடத்தியவர்கள்  ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட கடத்தல் போட்டியில் வாச்சாத்தி மக்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 269 பேரும் குற்ற வாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்ப ளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மலைவாழ் மக்களி டையே பெரும் நம்பிக்கையை ஏற் படுத்தியுள்ளது. இந்த கிராமத்தையே செங்கொடி இயக்கம் தத்தெடுத்து நீதிக்  கான போராட்டம் நடத்தி மூன்றரை கோடி ரூபாய் நிதிவுதவி பெற்றுத் தந்தது  என பேசினார்.

திருடர் என்ற பழிச்சொல் உடைத்தெறியப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   மத்தியக்குழு உறுப்பினரும், விவசாயி கள் சங்க மாநில பொதுச்செயலாளரு மான பி.சண்முகம் பேசுகையில், வாச்  சாத்தி கிராமத்தில் அமைதியை சீர்  குலைத்தனர். வாச்சாத்தி மக்களை  திருடர் என பழிசுமத்தினர். அதிகார  வர்க்கத்தினரின், திருடர் என்ற பழிச்  சொல்லை பொய்யாக்கியது செங்  கொடி சங்கம். இவர்கள் மீது வனத்  துறையினர் பொய் வழக்கில் கர்ப்பிணிப்  பெண்களைக் கூட சிறையில் அடைத்த னர். சிறையிலேயே குழந்தையும்  பிறந்தது. இந்த வழக்கில் நீதிபதி அக்பர்  அலி அவர்கள் குற்றமற்றவர்கள்  என தீர்ப்பு வழங்கினார்.

ஊதியம் பெறாமல் வழக்காடிய தோழர்கள்

19 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கில் 2011 செப்டம்பர்  29 ல் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிர சாத், வைகை, சம்கிராஜ், சுப்புராம், கே.இளங்கோவன் ஆகியோர் வழக்கு நடத்துவதற்காக எந்த பணமும் வாங்காமல் 19 ஆண்டுகாலம் வாதாடி  நீதி பெற்றுத் தந்தனர். ஆனால், குற்றவாளிகள் தரப்பில் மேல் முறையீட்டுக்கு சென்றனர். உயர்நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன் அவர்கள், வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் சம்பவத்தை கேட்டறிந்தார். இந்த கொடூர சம்ப வத்தை உளமாற உணர்ந்து வரலாற்று  தீர்ப்பை எழுதினார். 214 பேரும் குற்ற வாளிகள் என உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்நிலையில், உயர்நீதிமன்றம் தண்டனை உறுதி செய்யப்பட்ட வர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். வாச்சாத்தி கிராம  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்  டும் என பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில், செப்டம்பர் 30ஆம் தேதி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில் போராட்டம் நடத்திய தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் 62  ஆவது நினைவு தினமாகும். அவர்  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய  போராட்டமே, இன்று போராடுவதற்கு உந்துசக்தியாக உள்ளது. இந்த தீர்ப்பு  பல போராட்டங்களுக்கு உத்வேகமாக உள்ளது என்றார்.  முன்னதாக, வாச்சாத்தி கிரா மத்திற்கு வந்த தலைவர்களை, வாச் சாத்தி கிராமமக்கள்,  செங்கொடி ஏந்தி  மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து  ஊர்வலமாக சென்று வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். தீர்ப்பை  கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கி‘ கொண்டாடினர்.