நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், அக். 18- பெரம்பலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை சங்கு ஊதி, சாவுமணி அடித்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கோட்டத் துணைத் தலைவர் ப. சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் குமரி அனந்தன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். கோட்டச் செயலாளர் சி. சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து விளக்கவுரை ஆற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஷ்டியன் வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைத் தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். கோட்டப் பொருளாளர் மார்க்கண்டன் நன்றி தெரிவித்தார். பெரம்பலூர் கோட்டப் பொறியாளர் மீதும், திருச்சி கண்காணிப்பு பொறியாளர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப் பணியாளர்களை மாற்றுச் சாலைகளுக்கு பணிக்கு அனுப்பும் பொழுது போக்குவரத்துச் செலவினத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதற்கு செவி சாய்க்காத நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில அரசைக் கண்டித்தும், சங்கு ஊதி, சாவு மணி அடித்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
