tamilnadu

img

சிபிசிஐடி விசாரணைக்கு உதித்சூர்யா ஆஜராக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றக் கிளை அறிவுறுத்தியுள்ளது உதித் சூர்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்  செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

 “கடந்த மே மாதம் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரி பார்ப்பிற்கு பின்னர்தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந் தேன். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கல்லூரியில் படிக்க இயலவில்லை. கடந்த செப். 12- ஆம் தேதி முதல் கல்லூரியிலிருந்து விலகிக்கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துவிட்டு பின்னர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இந்த நிலையில் செப். 17- ஆம் தேதி நான் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன். இது முற்றிலும் தவறானது. இரு புகைப்படங்களும் வெவ்வேறானவை. இது வேண்டுமென்றே என்மேல் பழி போடும் செயலாகும். இதைத் தொடர்ந்து என்மேல் தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.

இந்த முன்ஜாமீன் மனுவை செவ்வாயன்று  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, “நீட்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆவணங்கள் உள்ளன.இதுதொடர்பாக தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது சிபிசிஐடி-க்கு மாற்றபட்டுள்ளது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய மாணவர் மும்பையில் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உதித் சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக அறிவுறுத்திய நீதிமன்றம், விசாரணையின் போது உதித்சூர்யா கைது செய்யப்பட்டால் முன் ஜாமீன் மனு ஜாமீன் மனுவாக ஏற்று கொண்டு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 1- ஆம் தேதி ஒத்திவைத்தார்.

;