tamilnadu

img

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.16 - தமிழகத்தில் புதன்கிழமை 19 மாவட்டங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் உள்ளிட்ட தென் மாநி லங்களின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ் நாட்டில் செப்.17 (புதன்கிழமை) அன்று மயிலாடுதுறை, நாகப் பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங் களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும், செப்.18 அன்று நீலகிரி, ஈரோடு, சேலம்,  கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.19 அன்று திரு வள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.