தீபாவளி போனஸ் வழங்க சுமைப் பணித் தொழிலாளர்கள் கோரிக்கை
கும்பகோணம், அக்.8 - டாஸ்மாக் குடோன் சுமைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருபுவனம் டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் திருபு வனம் டாஸ்மாக் குடோன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பிரபு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால், சிஐடியு தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சேகர், கைத்தறி சம்மேளன பொது செயலாளர் என்.பி. நாகேந்திரன் ஆகியோர் பேசினர். கைத்தறி சங்க மாவட்ட நிர்வாகி ஜி.பக்கிரிசாமி, சங்க செயலாளர் செல்வம், பொருளா ளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, குடோனிலிருந்து மதுபான பெட்டிகளை ஏற்றிச் செல்லும் விஜயலெக்ஷ்மி ட்ரான்ஸ் போர்ட் நிர்வாகத் திடமிருந்து மதுபான பெட்டி ஏற்று கூலியை தொழிலா ளர்களுக்கு உயர்த்தி வழங்குவது, பி.எப்., இஎஸ்ஐ பிடித்தம் செய்யாமல் உள்ள 15 தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்ய வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களின் கூலியை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். குடோனில் பணி பரியும் சுமை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு குடிநீர், ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட டாஸ்மாக் குடோன் மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலாளர் மனுவை பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.