லஞ்சம் கேட்டதாக தலைமை ஆசிரியர் கைது
பழிவாங்கும் நடவடிக்கை என மேலாண்மைக்குழு மறுப்பு
நாமக்கல், செப்.14- முன்னாள் மாணவரிடம் லஞ்சம் கேட்டதாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், பழி வாங்கும் நடவடிக்கையே என பள்ளி மேலாண்மைக்குழு தெரி வித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சிக்குட்பட்ட கண்டிப்புதூர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் 1990 ஆம் ஆண்டு கல்வி பயின்ற ஜெயவேல் என்பவர், மாற்றுச்சான்றிதழ் கேட்டு, தற்போதைய தலைமை ஆசிரியரான விஜயகுமார் என்ப வரை, சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் சந்தித்து விண்ணப்பம் செய்துள்ளார். அதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக் கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சாருக்கு ஜெயவேல் கொடுத்த புகா ரின்பேரில், போலீசார் வியாழ னன்று ஜெயவேலிடம் ரசாயனம் தட விய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அவரை கைது செய்த னர். இந்த விவகாரம் குறித்து பள்ளி மேலாண்மைக்குழு உறுப் பினர்கள் மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளனர். இதுகுறித்து பள்ளி மேலாண் மைக்குழுவினர் கூறுகையில், லஞ் சம் கேட்டதாக கூறும் ஜெயவேல், கடந்த ஆகஸ்ட் மாதமே பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது பள்ளி மேலாண்மைக்குழு உறுப் பினரிடம் பேசும்போது, பள்ளிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய் வதாகக்கூறி, முதற்கட்டமாக பள்ளி வளர்ச்சிக்கு ரூ.6 ஆயிரம் தருவ தாக அவராகவே கூறினார். அதற்கு நாங்கள் தலைமை ஆசிரியரிடம் அந்த பணத்தை கொடுத்து விடுங்கள், என கூறினோம். இந் நிலையில், ஜெயவேல் பள்ளியை களங்கப்படுத்தும் நோக்கத்தில், திட்டமிட்டு தலைமை ஆசிரியரு டன் வந்து பள்ளி மேலாண்மைக் குழுவிடம் ஒத்துக்கொண்ட தொகையை தராமல் ரூ.3000 மட் டுமே தருவதாக பேரம் பேசியுள் ளார். அப்போது, தலைமை ஆசிரி யர், ‘நீங்கள் தருவதாக சொன்ன தொகையை கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் பள்ளி மேலாண்மை உறுப்பினர்களிடம் பேசி அவர்களிடமே கொடுத்து விடுங்கள்’ எனக் கூறியுள்ளார். சரி எனக் கூறிவிட்டு சென்ற ஜெய வேல், பழிவாங்கும் நோக்குடன் தலைமை ஆசிரியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியில் காலை நேரத்தில் கராத்தே பயிற்சி எடுப்ப தற்காக ஜெயவேல் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவர் ஒரு மதம் சார்ந்த அமைப்பில் உள்ள தால், பள்ளியில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனு மதியில்லை என பள்ளி நிர்வாகம் கூறியதால், பழிவாங்கும் நோக்கத் தோடு அவர் பள்ளி தலைமை ஆசிரி யர் மீது வீண்பழி சுமத்தியுள் ளார். எனவே, இதுகுறித்து மேல் முறையீடு செய்யும் வகையில் கல்வி சார்ந்த அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.