கொரோனா பரவல் குறைந்து வருவதால் திருப்பதியில் செவ்வாயன்று முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவியின் தந்தை முருகானந்தம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. பள்ளி மாணவி மரண விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
செவ்வாயன்று முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அடுத்தடுத்து 10,12-ம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியான நிலையில், முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு விடுத்துள்ளார். தேர்வு தொடங்குவதற்கு சற்று முன்னரே வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.