பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. கொரோனா பாதிப் பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மூக்கு வழியாக செலுத்த க்கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு இறுதிக் கட்ட சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள் ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருத்துக்கு மருந்து கட்டுப் பாட்டு ஆணைய நிபுணர் குழு அனுமதி அளித்துள் ளது.
சென்னை திருவான்மி யூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகத்தை விரைவாக விசாரணை நடத்தி அம்பலப்படுத்திய காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித் த்துள்ளார்.
வெளியே செல்லும்போது மாஸ்க் கட்டாயம்; முடிந் தால் இரட்டை முகக் கவ சம் அணியுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை போலி யாக வழங்குவோர் பற்றி தகவல் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை களுக்கு கூடுதல் கட்ட ணம் வசூலித்தால் நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்து வம் மற்றும் மக்கள் நல்வா ழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் ஆய்வகங்கள் பரிசோத னையை முறையாக மேற் கொள்வதுடன் முடிவு களை உடனுக்குடன் பதி வேற்றம் செய்யவேண் டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தில்லியில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது என தில்லி அரசு கூறி யுள்ளது. கொரோனா தினசரி பரவல் விகிதம் 10% என்ற அளவில் உள்ளதாக தில்லி அரசு கூறியுள்ளது.