tamilnadu

img

சென்னை வந்தார் யஷ்வந்த் சின்ஹா

சென்னை, ஜூன் 30-  குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வியாழனன்று (ஜூன் 30) மாலை சந்தித்து ஆதரவு கோரினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடி யரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற வுள்ளது.  தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடி யரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வேலை யில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களமிறங்கின.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். அதேபோல் பாஜக கூட்டணி சார்பில் ஜார்க் கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டி யிடுகிறார். இவர்கள் இருவரும் நாடாளுமன்ற மாநிலங்க ளவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

யஷ்வந்த் சின்ஹா

மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார். புதனன்று கேரளா சென்ற அவர், முதல்வர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.  வியாழனன்று தமிழ்நாடு வந்த அவர்  அண்ணா அறிவா லயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அவர்கள் மத்தியில் பேசிய யஷ்வந்த் சின்கா நாட்டின் மதச்சார்பின்மை யை பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க ஒருமைப்பாட்டை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தம்மை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,பொ துச்செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டி.ஆர்பாலு, கு. செல்வபெருந்தகை (காங்கிரஸ்),  நாகை மாலி (சிபிஎம்), ராமச்சந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா (மமக), வேல்முருகன் (த.வாக), ஈஸ்வரன் (கொமதேக) மற்றும் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

 

;