மதுரை:
காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று விமர்சித்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர்கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகை குஷ்புதான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.