குஜராத் : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரை யும் - ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. 24 ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் அம்மாநில பாஜக அரசு சரியாக பராமரிக்காததால் புதன்கிழமை அன்று காலை இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்த சமயத்தில், பாலத்தில் பயணித்த 6 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. வியாழக்கிழமை அன்று நிலவரப்படி பால விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது. இத்தகைய சூழலில் மாய மான 4 பேரும் அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பால விபத்தில் உயிரிழந்தோர் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.