சாதிப் பெயர்கள் நீக்கத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் போதுமானதாக இல்லை!
சென்னை, அக். 9 - சாதிப் பெயர்களை நீக்கும் விஷயத்தில், தமிழக அரசின் வழி காட்டு நெறிமுறைகள் போது மானதாக இல்லை என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலக்குழு கூட்டம், வியாழனன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு தலைமை யிலான இந்த கூட்டத்தில், அகில இந்திய துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ், பொதுச்செய லாளர் பி. சுகந்தி, பொருளாளர் கே.முருகன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: காலனி என்கிற சொல்லை நீக்குவது தொடர்பாக 29.04.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் குடி யிருப்புகள், தெருக்கள், சாலை கள் உள்ளிட்ட பொது இடங் களுக்கு தற்போது இருக்கும் சாதிப்பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு 06.10.2025 அன்று வெளியிட்டுள்ளது. ஆதிக்கத்திற்கு சட்டப்பூர்வ அடையாளம் தந்துவிடக் கூடாது தீண்டாமையின் குறியீடாக இருக்கும் சொல்லை நீக்குவது என்ற அரசின் முயற்சியை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் போதுமானதாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. தீண்டாமையின் குறியீடாக இருக்கிற பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்கிற இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற பெயர்களுக்கு சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதாகவும் உள்ளது. சாதி ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் வழிகாட்டல் சென்னை மாநகராட்சி துவங்கி அனைத்து மாவட்டங் களிலும் சாதிப் பெயர்கள் சூட்டப் பட்டுள்ள பொது இடங்கள் பல இன்றும் இருக்கின்றன. அரசு ஆவணங்களிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதி ஆதிக்கத்தின் அப்பட்டமான அடையாளமாகும். களத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என் றால் இப்பெயர்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்கிறது இந்த வழிகாட்டு நெறி முறைகள். இது ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற சாதிப் பெயர்கள் மேலும் பலகாலம் தொடர்வதற்கு காரணமாக அமைந்து விடும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுட்டிக்காட்டு கிறது. சிங்காரவேலர் - அம்பேத்கர் பெயர்கள் இல்லை மேலும் மறுபெயரிடலுக்கு முன் மொழியப்பட்டுள்ள பெயர்களில் அம்பேத்கர், சிங்காரவேலர் போன்ற தலைவர்களின் பெயர் கள் கூட இல்லை என்பதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. எனவே தீண்டாமையின் குறி யீடுகளாக இருக்கிற பெயர் களை அகற்றுகிற அதே கால கட்டத்திலேயே சாதி ஆதிக்கத் தின் பௌதீகமான அடையாள மாகத் தொடர்கிற சாதிப் பெயர் களை அகற்றிட வேண்டும். அதற் கேற்ற வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.