அனைத்துக் காப்பீட்டிற்கும் முற்றிலுமாக ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்!
அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்
மதுரை, செப். 11 - காப்பீட்டுத் துறையில் முழுமையாகவே ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் தென்மண்டல செயற்குழு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கம் (லிகாய்) தென்மண்டல செயற்குழுக் கூட்டம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பி னர் ஏ.வி. பெல்லார்மின் மற்றும் செயல் தலைவர் எம். செல்வராஜ் தலைமையில், மதுரையில் செப்ட ம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. கோட்டச் செயலாளர் கே. மாரி வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய பொதுச்செய லாளர் பி.ஜி. திலீப், தென்மண்டலச் செயலாளர் பி.என். சுதாகரன், தமிழ்நாடு மாநிலத் தலைவர் பூவலிங்கம், மாநில பொதுச் செய லாளர் எஸ்.ஏ. கலாம், அன்பு நடராஜன், கேரள மாநிலச் செய லாளர் எம்.கே. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கோட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். லிகாய் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக மருத்துவ மற்றும் தனிநபர் ஆயுள் காப்பீட்டிற்கு ஒன்றிய அரசு தற்போது ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இதனை வரவேற்கும் அதேநேரத்தில் காப்பீட்டுத் துறையில் ஜிஎஸ்டியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலி யுறுத்தி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், லிகாயின் போராட்ட வெற்றியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுக்கூட்டங் கள் நடத்தவும் முடிவு செய்யப் பட்டது.
