ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மக்கள் மீதான வரிச்சுமை குறைவாம்!
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
சென்னை, செப். 14- ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப் பட்டுள்ள சீர்திருத்தம் காரணமாக மக்கள் மீதான வரிச்சுமை குறைந்து உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகை யில் 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறி முகப்படுத்தப்பட்டது. முதலில் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி விதிப்பு முறை இருந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக் கையின் பேரில் 28 சதவீத அதிக பட்ச வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் கழித்து, நான்கு அடுக்கு வரி விதிப்பு முறை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டு உள்ளது. 12 மற்றும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி விதிப்பு முறை தொடரும். இந்த வரி குறைப்பு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அம லுக்கு வரவுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிய மைச்சர், “ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்கள் மீதான வரி சுமையை வெகு வாக குறைந்துள்ளது. இந்த வரி குறைப்பு இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் மீதும் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு 12 மற்றும் 18 சதவீத வரிகளுடன் இருந்த பொருட்களின் மீதான வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட் டுள்ளது. சில பொருட்களின் மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது” என்றார். மாநிலங்களின் நலன்களை கருத்தில் கொண்டே இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இது மாநிலங்களுக்கு பெரிய அளவில் நன்மை பயக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.