tamilnadu

தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பை  மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்

பாபநாசம், ஆக. 17-  தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ- வுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தி யுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் தோழி விடுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வேலை செய்யும் பெண்களுக்கு, மாத  வாடகைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப் பட்டிருப்பது பெரும் சிரமத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும்  மலிவான தங்குமிட வசதிகளை வழங்க  வேண்டும் என்ற உன்னத நோக்கத்து டன் இந்த விடுதிகளை தமிழக அரசு தொடங்கியது. ஆனால் ஜிஎஸ்டி தனியாக வசூ லிக்கப்படுவதால், பல விடுதிகளில் மாத வாடகை ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக உயர்ந்துள்ளது. உதாரண மாக, அடையாரில் இருவர் தங்கும் குளிர்சாதனமில்லா அறையின் வாடகை ரூ.5,800 இருந்து ரூ.6,844 ஆக  உயர்ந்துள்ளது. தாம்பரத்தில் வாடகை  ரூ.9,200 ஆக உயர்ந்துள்ளது. இந்த  உயர்வு, பணி செய்யும் பெண்களுக் கும், உயர் கல்விக்கு தயாராகும் பெண் களுக்கும் கடும் நிதிச் சுமையாக மாறி யுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய  வேண்டும். ஒன்றிய அரசும் தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். இந்த விடுதிகள் ஆடம்பரத் தங்குமிடங்கள் அல்ல; சமூக நலத் திட்டங்களின் ஓர் அங்கம்  என்பதால், அவை ஜிஎஸ்டி வரம்பிற்குள்  கொண்டு வரப்படக் கூடாது. பெண்களை சுய சார்புடையவர் களாக உருவாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அவர்களது நிதிச் சுமையை  ஜிஎஸ்டி வரியை சுமத்தி அதிகரிக்கா மல், அரசு விரைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்து கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.