2 ஆண்டுகளுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப்-4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அடுத்தாண்டிற்கான (2022) பணி நியமனங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை வெளியிட்டார்.
குரூப் 2, குரூப் 2ஏ (காலிப்பணியிடம் - 5,831)
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிப்பாணை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்
குரூப் 4 (காலிப்பணியிடம் - 5,244)
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை மார்ச் மாதத்தில் வெளியாகும். குரூப்-4 தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி. குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் கட்டாயம்.