மாபெரும் சிலம்பாட்டப் போட்டி
கோவை, அக்.12- ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில், கோவையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. கோவை, புலியகுளத்தில், ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில் ஞாயிறன்று சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. திமுக கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப் பாளரும், சிலம்பாட்ட ஆசானுமான அர்ஜுனன் தலைமை வகித்தார். இப்போட்டியை திமுக மாநகர் மாவட்டச் செயலா ளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார். இதில் கோவை, ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், தாராபுரம் பகுதி களிலிருந்து 300க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டி களில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிலம்பாட்ட மூத்த ஆசான்கள் குணசேகரன், பழனிச்சாமி மற்றும் நமசிவாயம் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
