tamilnadu

img

வாய்ப்பு வாசல்

அரசு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணி

1,996 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) நடத்தவிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. வயது வரம்பு - பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக 53 வயதும், இட ஒதுக்கீட்டுப்  பிரிவினருக்கு 58 வயதும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கல்வித்தகுதி - தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டமும், பி.எட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு இருக்கும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட  கூடுதல் விபரங்களையும், விண்ணப்பிக்க வும் www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.  விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - ஆகஸ்டு 12, 2025.

ஒன்றிய உளவுத்துறையில் பணி

ஒன்றிய அரசின் உளவுத்துறையில் உதவி மத்திய உளவு அலுவலர்(இரண்டாம் நிலை) பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஒன்றிய உள்துறையின் கீழ் வரும் இந்தப் பணியில் 3 ஆயிரத்து 717 பணியிடங்களை நிரப்பவுள்ளார்கள்.  வயது வரம்பு - 18 வயது முதல் 27 வயது வரை. பட்டியலின, பழங்குடித் தேர்வர்களுக்கு ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். விதவைகள், கணவரிடமிருந்து சட்டரீதியாக மணமுறிவு பெற்ற பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி உள்ளது. கல்வித் தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப் பணியில் பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். தேர்வு முறை - மூன்று கட்டங்களாகத் தேர்வு முறை இருக்கும். முதல் கட்டத் தேர்வில் கொள்குறி வகை வினாக்கள் இடம் பெறும். இரண்டாம் கட்டத் தேர்வில்  ஆங்கிலம், பொருளியல், சமூக-அறி வியல் பிரச்சனைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் இருந்து வரும் வினாக் களுக்கு விரிவான விடைகளைத் தர வேண்டும். மூன்றாவது கட்டமாக நேர்முகத்தேர்வு இருக்கும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - ஆகஸ்டு 12, 2025 விண்ணப்பிக்கவும், தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கூடுதல் விபரங்களைப் பெறவும் www.mha.gov.in அல்லது www.ncs.gov.in ஆகிய தளங்களைப் பார்வையிடலாம்.

வரும் தேர்வுகள்

1. பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் முதல்நிலைத் தேர்வு - ஆகஸ்ட் 2025 2.ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - ஒருங்கிணைந்த பட்டதாரி மட்டத்திலான தேர்வு( SSC-CGL) - முதல்நிலை - ஆகஸ்டு 13 முதல் ஆகஸ்ட் 30 வரை. 3. வங்கி அதிகாரிகள் தேர்வு - முதல்நிலைத் தேர்வு - 17, 23 மற்றும் 24 ஆகஸ்ட் 2025.     முதன்மைத் தேர்வு - 12 அக்டோபர் 2025. 4. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - ஒருங்கிணைந்த மேல்நிலைப்பள்ளிப்படிப்பு மட்டத்திலான தேர்வு( SSC-CHSL) - முதல்நிலை - செப்டம்பர் 8  முதல் செப்டம்பர் 18 வரை. 5. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - மல்டி டாஸ்கிங்  (SSC - MTS) தேர்வு - செப்டம்பர் 20  முதல் செப்டம்பர் 24 வரை.

தேர்வு அட்டவணை - 2026

ஒன்றிய அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம்(Union Public Service Commission) நடத்தும் குடிமைப்பணிகள் (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட) தேர்வு(2026)க்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அறிவிக்கை வெளியாகும் நாள்  ஜனவரி 14, 2026 விண்ணப்பிக்கக் கடைசித் தேதி  பிப்ரவரி 3, 2026 முதல்நிலைத் தேர்வு - மே 24, 2026 முதன்மைத் தேர்வு - ஆகஸ்ட் 21, 2026 முதல்