tamilnadu

வருவாய்த் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

வருவாய்த் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

சென்னை, ஆக. 29 - வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியி டங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரே விதிகளுக்கு உட்பட்டு உட னடியாக நிரப்ப தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையருக்கு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா கடிதம் அனுப்பியுள்ளார்.  அந்த கடிதத்தில், “வருவாய்த் துறை யில், அனைத்து மாவட்டங்களிலும் மூன்று  வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி யிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரே (பொது) விதிகளுக்கு உட்ப ட்டு நிரப்புவதற்கு ஒப்புதல் அளிக்கப்படு கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அந்த காலிப்பணி யிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.