காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், செப். 24- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், செவ்வாய்க்கிழமை மாவட்டத் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ப. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. சுப்பிரமணியன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், பி.எப்.ஆர்.டி.ஏ. ஓய்வூதிய நிதி ஆணையத்தை கலைத்திட வேண்டும். என்.பி.எஸ். யு.பி.எஸ். திட்டத்தில் செலுத்தப்பட்ட தொகைகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.