tamilnadu

img

தமிழின் சுவை! - அருப்புக்கோட்டை செல்வம்

தமிழில் நன்றாம் இலக்கணம்
தளையும் தலையும் விளக்கிடும்
அமிழ்தாம் தமிழின் இலக்கணம்
அறிவால் உணர்ந்தே படிக்கணும்!

பிழைகள் இன்றி எழுதிடவே
பெரிதும் துணையாம் இலக்கணம்
பழைமை எனினும் இலக்கணம்
புதுமை பொதிந்தது இலக்கணம்!

எண்ணில் எண்ணில் என்னென்ன
எனக்கும் உனக்கும் விளக்கிடும்
பண்ணில் சுதியும் தாளமும்
பாவமும் குழைத்து ஊட்டிடும்!

சுட்டும் எழுத்தைச் சட்டென
சுட்டிக் காட்டும் இலக்கணம்
கட்டை விரலில் வைத்திட
கவலை நமக்கேன் மலைக்கணும்!

அ, ஆ தொடங்கும் போதிலே
அதிலே கவனம் வைக்கணும்
ஆகா அதனின் சுவையினை
அனைவரும் உணர விளக்கணும்!

வெண்பா சீரும் அசையும்தான்
விளக்கம் சொல்லி இசையும்தான்
நண்பா இசைப்பா எப்பாவும்
நற்றமிழ் கற்றால் தப்பாதாம்!