ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!
சென்னை, அக். 14 - தங்கம் விலை, செவ் வாய்க்கிழமை (அக்.14) ஒரே நாளில் பவுனுக்கு 1,960 ரூபாய் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பவுன் 94,600 ரூபாயை எட்டி யுள்ளது. ஒரு கிராம் 11,825 ஆக உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 7 அன்று பவுன் 90,000 ரூபாயைக் கடந்த நிலையில், அக்டோபர் 11 அன்று 92,000 ரூபாயை எட்டி யது. தற்போது மேலும் 2,200 ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, அக். 14 - தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களிலும், புதன்கிழமையன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட் டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென் காசி, திருநெல்வேலி, கன்னி யாகுமரி, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்க ல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங் களிலும், புதுச்சேரியிலும் 7 முதல் 11 செ.மீ. வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாகவும் கூறியுள்ளது.
