tamilnadu

img

பணமதிப்பிழப்பு வேறு, பணமதிப்பு நீக்கம் வேறு.... காவலர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிடுக...

மதுரை:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் ‘பண மதிப்பிழப்பு’ மற்றும்‘பணமதிப்பு நீக்கம்’ என்ற சொற்களை வேறுபடுத்துவதில்  நிபுணர் குழு தவறிவிட்டது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடும்அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்வாரியம் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கேள்விக்கானபதிலுக்கு 0.5 கட்-ஆப் மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் பங்கேற்றடி.எஸ்.அபினேஷ், கே.ராஜ்குமார் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:-காவல் ஆய்வாளர் (தாலுகா, ஆயுத ரிசர்வ் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவலர்)பதவிக்கு 2019-ஆம்ஆண்டு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில்ஒன்று: “1947 முதல் இந்திய ரூபாய்எத்தனை முறை பணமதிப்பு குறைக்கப்பட்டது?” என்ற கேள்விக்கு “மூன்று முறை” என குறிப்பிட்டிருந்தோம். இது சரியான பதில். ஆனால் “நான்கு முறை” என்பதேசரியான பதில் எனக் கூறிவிட்டனர்.இதனால் நாங்கள் 0.5 மதிப்பெண்களை இழந்துவிட்டோம். எனவே தங்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கூறியிருந்தனர்.

இவர்களது  மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார்,  பணத்தைமூன்று முறை மதிப்புகுறைப்பு செய்துள்ளனர். இது தவிர, நிபுணர் குழு 2016- ஆம் ஆண்டில் ரூ.500 மற்றும் ரூ.1,000-த்தை பண மதிப்பு நீக்கம் செய்ததையும் கணக்கில் எடுத்துக்கொண்டது.  எனவே நான்குமுறை மதிப்பிட்டதாக நிபுணர்குழு முடிவுக்கு வந்துள்ளது.‘பண மதிப்பிழப்பு’ மற்றும் ‘பணமதிப்பு நீக்கம்’ ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது. மதிப்பிழப்பு மற்ற நாடுகளுடனான பணத்திற்கேற்றவாறு நமது மதிப்பை குறைத்துக்கொள்வது. பண மதிப்பு நீக்கம் என்பது பயன்பாட்டிலிருந்து முற்றாக நீக்கிவிடுவது (செல்லாது என அறிவிப்பது) ஆகும். இந்தச் சூழலில் கேள்வித்தாளை தயாரித்த நிபுணர் குழு எவ்வாறு ஒரு மாறுபட்ட கருத்தை அளித்தது?.
இதுபோன்ற விஷயங்களில் காவலர் ஆட்சேர்ப்பு வாரியம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  ஒரு முக்கிய பதிலில் ஒரு நிபுணர் கருத்தைப் பெறுவதிலும், குழுவிற்கு நிபுணர்களை தேர்ந்தெடுப்பதிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு, தற்போதுள்ள நிபுணர்கள் குழுவைத் தவிர, இரண்டாவது நிபுணர் கருத்தையும் பெறலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

;