tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ஜெர்மன் நாட்டினர் பங்கேற்பு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ஜெர்மன் நாட்டினர் பங்கேற்பு

புதுக்கோட்டை, அக். 12-  புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இருவர் பார்வையிட்டு, புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஜோஸ்பின், விஜயனி. இவர்கள் ஆர்டிஓ தொண்டு நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று போதையால் ஏற்படும் தீங்குகளை விவரித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் சனிக்கிழமை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்தனர். அவர்களை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் ஜீவி, எம்.வீரமுத்து, கே.சதாசிவம் உள்ளிட்டோர் வரவேற்று ஆங்கிலப் புத்தகங்களை பரிசளித்தனர். ஜோஸ்பின், விஜயனி ஆகிய இருவரும் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த மாணவ-மாணவிகளுக்கு, அவர்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தனர்.