ரூ 7020 கோடி முதலீடு தமிழகத்துடன் ஜெர்மனி நிறுவனங்கள் ஒப்பந்தம்
15,320 பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு தகவல்
சென்னை, செப். 2 - ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் ரூ. 7,020 கோடி முதலீடுகள் ஈர்க்கப் பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவற்றின் மூலம் 15 ஆயிரத்து 320 நபர் களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஒரு பகுதியாக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், ஜெர்மனி நிறுவனங்களுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தைகளில், வென்சிஸ் எனர்ஜி 5,238 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை யில் ரூ. 1,068 கோடியையும், பிஏஎஸ்எப் நிறுவனம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ. 300 கோடியையும், 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் ரூ. 300 கோடியையும் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதேபோல ஹெர்ரென்க்னெக்ட் இந்தியா நிறுவனம், 400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ. 250 கோடியையும், பல்ஸ் நிறுவனம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ. 200 கோடியையும், விட்சென்மேன் இந்தியா 450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ. 200 கோடியையும், மாஸ் எனர்ஜி 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ. 200 கோடி யையும், தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளன. ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற் காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் உடனும் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.