tamilnadu

img

கார்த்தி வித்யாலயா பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த தின விழா

கார்த்தி வித்யாலயா பள்ளியில்  ஜெனிவா ஒப்பந்த தின விழா

கும்பகோணம், ஆக. 23-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில், கும்பகோணம் கல்வி மாவட்ட அளவிலான ஜெனிவா ஒப்பந்த தினவிழா நடைபெற்றது.  விழாவில், கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் எஸ்.ஏ. கார்த்திகேயன்  ஜே.ஆர்.சி. கொடியினை ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். கும்பகோணம் ரெட் கிராஸ் தலைவர் ஆன்ட்ரூ ரொசாரியா, நிறுவனர் படத்தை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் வரதராஜன், மா கோபாலகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, ஜெனிவா ஒப்பந்த தின விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரா. சுந்தர் தலைமை வகித்தார். தனியார் பள்ளிகள் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் பா. செந்தில், தொடக்கப் பள்ளிகள் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் மா. அய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கும்பகோணம் கல்வி மாவட்ட ஜே. ஆர்.சி கன்வீனர் பி.ஜான் ஸ்டீபன் வரவேற்றார்.  நிகழ்ச்சிகளை மாவட்ட ஜே.ஆர்.சி இணை கன்வீனர் கார்த்திகேயன் மற்றும் முத்துக்குமாரி தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி பொறுப்பாளர்கள் செய்தனர். ஜே.ஆர்.சி இணை கன்வீனர் பாரதி நன்றி கூறினார்.