tamilnadu

img

குமரி மாவட்ட மக்களின் களப் போராளி ஜி.எஸ்.மணி

குமரி மாவட்ட மக்களின் களப் போராளி ஜி.எஸ்.மணி

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட மக்கள் போராளி தோழர்.ஜி.எஸ்.மணி நம்மை விட்டு பிரிந்து 45 ஆண்டு கள் உருண்டோடி விட்டது. இன்றும் லட்சக்கணக்கான மக்கள் மனதில் ஜி.எஸ்.மணி ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறார். பொதுவாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளை எழுதி வைப்பது அரிது. தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காக போராடி, தங்கள் கொண்ட இலட்சியத்திலிருந்து இம்மி யளவும் பிசகாமல் சமத்துவ சமுதாயத்தை இம்மண்ணில் உருவாக்க கொடிய அடக்கு முறையை சந்தித்த லட்சக்கணக்கான தலை வர்களின் வரலாறுகளை தலைமுறை யினருக்கு கொண்டு செல்ல முடியவில்லை.  ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய 4-ஆவது மாநாடு கேரளா மாநிலம் பாலக்காடு நகரில் 1956-ஆம் ஆண்டு நடைபெற்றது. இம்மாநாட்டில் மொத்தம் 407 பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். இம்மாநாட்டு தகுதி ஆய்வுக் குழுவின் அறிக்கைபடி கலந்து கொண்ட பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்த மொத்த காலம் 1344 ஆண்டுகள். சராசரியாக 3 ஆண்டு கள் சிறையில் இருந்துள்ளனர். இந்த பிரதி நிதிகள் தலைமறைவாக இருந்து கட்சி பணியாற்றிய காலம் 1029 ஆண்டுகள். சரா சரியாக இரண்டரை  ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ள னர். இத்தகைய வீரம் செறிந்த துடிப்பான வீரர்களின் செயல்பாடும், தன்னிகரில்லா தியாகங்களும் கொண்டதே பெருமைமிகு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.  விடுதலைப் போராட்டத்தில்... விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த, சிறைச்சாலை கொடுமைகளை அனுபவித்த, அந்தமான் கைதிகளாக அடைக்கப்பட்டு வாழ்வை இழந்த பல கம்யூ னிஸ்ட் தியாகிகளுடைய பெயர்கள் அரசு வெளியிட்ட விடுதலைப் போராட்ட வர லாற்றில் இடம் பெறவில்லை. காரணம் அவர்கள் பிரிட்டிஷ் அரசு வழங்கிய விடுதலைக்குப் பின் இந்திய அரசு வழங்கிய பென்ஷன் தொகையை வாங்க மறுத்தனர். அதேநேரம், சிலர் பிரிட்டீஷ் மகாராணிக்கு கருணை மனு போட்டு பென்ஷன் தொகை யை அதிகம் பெற்று கொண்டனர். பிரிட்டீஷ் ஆட்சியாளருக்கு உதவினர். இவர்களின் பெயர்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில், அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. இவ்வித தியாக வரலாற்றில் கன்னி யாகுமரி மாவட்ட கம்யூனிஸ்ட் தலைவர்க ளுக்கும் பெரும் பங்குண்டு. கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் 1 வரை திரு விதாங்கூர் மன்னர்களின் சனாதன கோட்பாட்டுக்கு உட்பட்ட ஆட்சியில் இருந்து வந்தது. இக்கொடுங்கோல் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகவும் மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கவும் நடந்த போராட்டம் எண்ணிலடங்காது.  மாவட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக போராடினர். தோட்டத் தொழிலாளர்கள், முந்திரித் தொழிலாளர்கள் மற்றும் பயோனியர் பஸ் முதலாளியின் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்து நடத்திய போராட்டங்களும் வெற்றி களும் ஜி.எஸ்.மணி தலைமையிலான தொழிற்சங்க நடவடிக்கைகளே. இன்று நூற்றுக்கணக்கான சங்கங்கள் புற்றீசல் போல் முளைத்துள்ளன. அன்று சங்கம் அமைப்பது எளிதான காரியமல்ல. அது மட்டுமல்ல கல்விக்காக, சுகாதார வளர்ச்சிக் காக கிராம மக்களின் மேம்பாட்டுக்காக, மக்கள் ஒற்றுமைக்காக இன்றும் மாற்றுக் கொள்கையுடன் போராடுவது ஜி.எஸ்.மணி போன்றவர்களால் உருவாக்கப்பட்ட செம்படை இயக்கமே. முதல் கிளை உருவாக்கம் 1942-ஆம் ஆண்டு ஜி.எஸ்.மணி யால் குழித்துறையில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டு 1947-ஆம் ஆண்டு தக்கலை குமார கோவில் பக்கம் இருந்த கல் மண்டபத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவட்ட அளவிலான ஒரு  கூட்டம் நடைபெற்றது. அதுவே கன்னியா குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முதல் மாவட்டக்குழு. மாவட்டச் செய லாளராக ஜி.எஸ்.மணி தேர்வு செய்யப் பட்டார். அன்று போட்ட விதை இன்று சின்ன முட்டம் முதல் நீரோடி வரை, காவல் கிணறு முதல் களியக்காவிளை வரை எந்த குக்கிராமமாக இருந்தாலும் நகரமாக  இருந்தாலும் அங்கெல்லாம் ஜி.எஸ்.மணியால் வழி நடத்தப்பட்ட பல ஆயிரம் கம்யூனிஸ்ட்களும், முற்போக்கு இளைஞர்க ளும், தொழிலாளர்களும், மாதர், மாண வர்களும் உள்ளனர்.  இவ்வித வளர்ச்சி என்பது ஜாதி, மத உணர்வுகளை தூண்டியோ, கார்ப்பரேட்டு களின் கருப்புப் பணத்தின் உதவியாலோ, சினிமா நடிகர், நடிகைகளின் கவர்ச்சியைக் காட்டியோ வந்ததல்ல. சுதந்திரப் போராட்டத்திலும், தொழிலாளர் வர்க்கப் போராட்டத்திலும் திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயரின் சித்ரவதைக்கும், பட்டம் தாணுபிள்ளையின் கொடுமை நிறைந்த போலீஸ் பேயாட்சிக்கும் எதிராகப் போராடி ஜி.எஸ்.மணி 5 வருடங்களுக்கு மேல் சிறை கொட்டடியில் அடைபட்டு சித்ரவதைகள் அனுபவித்தனர். அவர் தலைமையில் ஆயிரம், ஆயிரம் கம்யூனிஸ்ட்டுகள் இப் போராட்டங்களில் கலந்து சித்ரவதைகள் அனுபவித்தார். இதன் விளைவாகவே 1942-இல் சிலரால் ஜி.எஸ்.மணி தலை மையில் உருவான கம்யூனிஸ்ட் இயக்கம் மாவட்டத்தில் யாராலும் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்தது. மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், பல பேரூராட்சி, ஊராட்சி, தொடக்க வேளாண்மை சங்கம் போன்ற தலைமைப் பொறுப்புகளுக்கு வரமுடிந்தது. தோழர்.ஜி.எஸ்.மணி 1977-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விள வங்கோடு தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். ஆனால் முழுமையாக 5 ஆண்டு கள் சட்டமன்ற பணியை அவரால் நிறை வேற்ற இயலவில்லை. 1979-ஆம் ஆண்டு அவருக்கு கொடிய புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரம், சென்னை என மருத்துவம் பார்த்த பிறகும் புற்றுநோய் அவரை காவு கொண்டது. 1979 அக்டோபர் 5-ஆம் தேதி அவர் உழைப்பாளி மக்களுக்காக சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டார்.  மூலை முடுக்கெல்லாம்... மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக எதிரி களை எதிர்த்துப் போராடி அளப்பரிய தியா கங்களை செய்தது மட்டுமல்ல, நூற்றுக்க ணக்கான இளைஞர்களையும், தொழிலா ளர்களையும் இப்போராட்டங்களில் பங்கெ டுக்க வைத்தார். இன்றும் மூலை முடுக் கெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகளுக்காக செங்கொடி ஏந்தி போராடிக் கொண்டே இருக்கின்றனர். இது தோழர்.ஜி.எஸ்.மணியால் உருவாக் கப்பட்ட செம்படையின் வளர்ச்சியே. சமீப காலமாக மாவட்ட இளைஞர்களை மத மோ தல்களுக்கு திரட்டுகின்றனர். மறைமுக மாக போதை பழக்கத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஊக்கப் படுத்துகின்றனர். கார்ப்பரேட்டுகளின் கள்ளப் பணத்தை வாரி இறைக்கின்றனர். சிறுபான்மையினர் மற்றும் கம்யூனி ஸ்ட்டுகள் மீது வெறுப்பு அரசியலை பரப்பு கின்றனர். இது மாவட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும்.  வாழ்வாதார மேம்பாட்டுக்காகவோ, வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, சக்தி மிக்க மாவட்ட இளைஞர்களை பயன் படுத்துவதில்லை. பல அரசியல் கட்சிகள் இவ்வித இளைஞர்களை ஓட்டு அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். உண்மை வரலாற்றையும், அறிவியலையும் இளை ஞர்களிடமிருந்து திட்டமிட்டு பிரிக்கின்றனர். இருப்பினும் இவைகளிலிருந்து மாவட்ட மக்களின் வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்புக்காக ஆயிரம், ஆயிரம் இளை ஞர்கள் ஜி.எஸ்.மணி காட்டிய பாதையில் போராடிக் கொண்டே இருக்கின்றனர்.  உத்தமத் தியாகி தோழர் ஜி.எஸ்.மணி மறைவிற்கு, கட்சியின் தமிழ்மாநில செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த ஏ.பாலசுப்பிரமணியம் உணர்ச்சி மிகுந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ‘நமது ஆருயிர் தோழர் ஜி.எஸ்.மணி எம்.எல்.ஏ அவர்களை புற்றுநோய் கொள்ளை கொண்டு விட்டது. வாழ்நாள் முழுவதும் கட்சியை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்காத உத்தம தியாகியாவார் அவர். தேசிய விடுதலை போராட்டத்தில் சுதேசி சமஸ்தானங்களில் பொறுப்பாட்சிக்கான கிளர்ச்சி நடந்தது. அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த குமரி மாவட்டத்தின் இத் தவப்புதல்வன் அக்கிளர்ச்சியில் ஈடுபட்டு சர்.சி.பி.ராமசாமி ஐயரின் காட்டு ராஜதர்பாரின் வர்ணிக்க முடியாத சித்திரவதைக்கும் கொடுமைக்கும் ஆளானவர். பின்னர் குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற பெரும் தலைவர். பட்டம் தாணுபிள்ளையின் கொடுமை நிறைந்த போலீஸ் பேயாட்சி அவரை லாக்கப் சித்ரவதைக்கு உள்ளடக்கியது. அஞ்சா நெஞ்சன் மணி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.  விதைத்துக்கொண்டே இருப்போம்! முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்! -புரட்சியாளர் சே குவேரா என்.முருகேசன்,  சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர், குமரி மாவட்டம்