சென்னை, மார்ச் 16- தானே, வர்தா, கஜா, ஒக்கி, சென்னை பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மின் தடைகளை குறுகிய காலத்தில் சீரமைத்து மின் விநியோகம் வழங்கி அரசுக்கு பெருமை சேர்த்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடக் கோரி சென்னையில் புதனன்று (மார்ச் 16) மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அடை யாளம் கண்டு ஒப்பந்தப்படி ரூ. 380 வழங்க வேண்டும், பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், மின் தொடரமைப்பு கழகம், பொது கட்டு மான வட்டம் மற்றும் எரிவாயு சுழலி பகுதி களில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும், அனல், புனல் காற்றாலை மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவல கம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன், துணை பொதுச் செயலாளர்கள் பழனிவேல், கே.ரவிச்சந்திரன், எஸ்.வண்ணமுத்து, எம்.தனலட்சுமி, வடக்கு மண்டல செய லாளர் ஆர்.ரவிக்குமார், தெற்கு மண்டல செயலாளர் ஏ.முருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி, கட்டுமான பணிகள் மற்றும் விநியோகப் பகுதிகளில் பல ஆண்டு களாக ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10.8.2007இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 1998இல் இருந்து 2003ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணி யாற்றிய சுமார் 21,600 ஒப்பந்த ஊழியர் களை அடையாளம் கண்டு மஸ்தூர் என்ற பதவியில் பணி நியமனம் செய்யப்பட்ட னர், அதற்கு பின்பு தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 4,452 ஒப்பந்த பணியாளர்கள் 2010-11ஆம் ஆண்டுகளில் தினக்கூலி ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.
சமூகப்பாதுகாப்பு இல்லை
அதற்கு பின்பு மின்வாரிய நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்வாரி யத்தில் இல்லை என விநியோகப் பிரிவு அலுவலர்களிடம் மாதந்தோறும் சான்றிதழை கேட்டுப் பெற்றது. ஆனால் உண்மையான நிலை 1998ஆம் ஆண்டி லிருந்து அடையாளம் காணப்படுவதில் விடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து மின்வாரியத்தில் பிரிவு அலு வலர் தரும் குறைந்த ஊதியத்தில் எந்த வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். இவர் களுக்கான கூலியை புதிதாக மின் இணைப்புக் கோரும் மின் நுகர்வோரிட மும், சென்னை மாநகரம் போன்ற கேபிள் உள்ள இடங்களில் மின்தடை ஏற்பட்ட மின் நுகர்வோரிடம் தொகையைப் பெற்று பிரிவு அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
வாரியத்திற்கு வருவாய் இழப்பு
அதேபோல் பாதுகாக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் அதாவது அனல், புனல், காற்றாலை உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரப்படுத்தாமல் இருப்பது மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசாணை 950இன்படி இந்த பகுதிகளில் ஒப்பந்த முறையே இருக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் நிர்வாகமே அந்த சட்டத்தை மீறி வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட தானே, வர்தா, கஜா, ஒக்கி மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மின் தடைகளை குறுகிய காலத்தில் சீரமைத்து மின்விநியோகத்தை வழங்கி தமிழக அரசுக்கு பெருமை சேர்த்தவர்கள் இந்த ஒப்பந்த ஊழியர்கள்.
தினக்கூலியை நேரடியாக வழங்குக!
மின்வாரியத்தின் அனைத்து அசைவு களிலும், வளர்ச்சியிலும் ஒப்பந்த ஊழியர்களின் பங்கு மறுக்க முடியாது. தற்போது திமுக அரசு தனது தேர்தல் அறிக் கையில் பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்ப ந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற உடனடியாக வேண்டும். கடந்த 22.2.2018ஆம் ஆண்டு ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு 380 ரூபாய் தினக்கூலியை வாரி யமே நேரடியாக வழங்க வேண்டும். தமிழக அரசும், வாரியமும் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங் களில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.