இலவச தோல் நோய் மருத்துவ முகாம்
அறந்தாங்கி, ஆக. 24- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில், சாதி ஆணவக் கொலைகளை கண்டித்தும், அதற்கு தமிழக அரசு தனிச் சட்டம் உடனே இயற்றக் கோரியும், அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பாண்டி, கணேசன், மணமேல்குடி சிபிஎம் விவசாயப் பிரிவு நிர்வாகி கரு. ராமநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், திசைகள் ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, சமூக ஆர்வலர் கலை பிரபு, கோட்டைப்பட்டினம் சமூக ஆர்வலர் லாபீர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் 210 பேருக்கு தோல் நோய் மருத்துவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி சிகிச்சை அளித்தார்.
