tamilnadu

img

நூற்றாண்டு கண்ட தோழர் எல்.ஜி.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஆசிரியர்களின் நலன்களுக்காக அரும்பாடுபட்டவருமான தோழர் எல்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா திருச்சி ஸ்ரீரங்கத்தில் வியாழனன்று (டிச.15) நடைபெற்றது.  விழாவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மணிமேகலை, மாநில பொதுச்செயலாளர் ச.மயில், மாநிலப் பொருளாளர் மாத்யூ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா மற்றும் சிஐடியு, ஆட்டோ சங்க நிர்வாகிகள் தோழர் எல்.கோபாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.