tamilnadu

img

தருமபுரி முத்து அறக்கட்டளை கட்டிடத்தில் நுழைந்து அக்கிரமப்பிரவேசம் செய்தது கண்டிக்கத்தக்கது

தருமபுரி, மார்ச் 22- தருமபுரி முத்து அறக்கட்டளைக்கு சொந்தமான முத்து இல்லத்திற்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அத்துமீறி நுழைந்து பூட்டை உடைத்தும் பெயர்ப்பலகையை சேதப்படுத்தியதும் கண்டிக்கத்தக்கது என்று அறக்கட்டளையின் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான மாதன் கூறினார். தருமபுரியில் புதனன்று செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறிய தாவது: கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முத்து நினைவு அறக்கட்டளை பதிவு செய்யப் பட்டு கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு அறப்பணிகளை செய்து வருகிறது.

தருமபுரி நகரில் வெள்ளேகவுண்டம் பாளையம் சர்வே.எண்: 106 -ல் முத்து பெயரில் பட்டாவாக இருந்த தற்போதைய கட்டிடமான முத்து இல்லம் அதனுடைய அடிமனை ஆகியவற்றை முத்துவின்  வாரிசுதாரர்களிடமிருந்து சுத்த கிரயம் பெற்று வருவாய் ஆவணங்களில் முத்து நினைவு அறக்கட்டளை பெயரிலும், குடிநீர் இணைப்பு மின் இணைப்பு சொத்து வரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முத்து நினைவு அறக்கட்டளை என்ற பெய ரில் பெற்று நாளது தேதி வரை அறக்கட்ட ளையின் அனுபவத்தில் இருந்து வருகிறது. இந்த அறக்கட்டளையில் கல்வி, வேலை  வாய்ப்பு வழிகாட்டி, கலை இலக்கியம், மனித உரிமை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் பல்வேறு சமூக  நல அமைப்புகளுக்கு முத்து நினைவு அறக்கட்டளை முத்து இல்ல கட்டிடத்தில் செயல்பட இடம் அளித்து வந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம்  முத்து மறைந்ததை அடுத்து ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் முத்து இல்லத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இலவச சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல், முதியோர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு இலவச வேட்டி சேலை மற்றும் உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அறப்பணிகளை செய்து வருகிறோம். கடந்த 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021  ஆம் ஆண்டுகளில் கோவிட் 19 பெருந் தொற்று காலத்தில் நிவாரண உதவிகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முத்து அறக்கட்டளை பணியாற்றியது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை  சார்ந்த பெண்ணாகரம் நஞ்சப்பன் மற்றும்  கலைச்செல்வன் உள்ளிட்ட 50 பேர் முத்து நினைவு அறக்கட்டளைக்கு சொந்த மான அதன் அனுபவத்திலிருந்து வரும் முத்து இல்லம் கட்டிடத்தில் அராஜகமான முறையில் பூட்டை உடைத்து அலுவலக வாயிலிருந்த அறக்கட்டளை  பெயர் பலகை யை சேதப்படுத்தி  அக்கிரமப்பிரவேசம் செய்து உள்ளே நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி அறக்கட்டளை தலைவர் மாதன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். முத்து நினைவு அறக்கட்டளைக்கும் அதன் சொத்தான முத்து இல்லத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கலைச் செல்வன், நஞ்சப்பன் உள்ளிட்டோர் சொந்தம் கொண்டாடுவது தவறானது. முத்து இல்லம் தொடர்பான வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு உள்ளதாக நஞ்சப்பன் மற்றும் கலைச்செல்வம் தரப்பினர் கூறுவது தவறானது. இதுகுறித்து வழக்கு 205/2012 தற்போது தர்மபுரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. வருகிற 20-04- 2023  அன்று வழக்கு வாய்தாவும் போடப் பட்டுள்ளது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவரான இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினரான வி. மாதன் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்கள் பலர் முத்து நினைவு அறக்கட்டளை யில் அறக்கட்டளைதாரர்களாக இருந்து பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அறக்கட்டளை சொத்தான முத்து இல்லத்தையும் பராமரித்து வருகின்றனர்.  முத்து நினைவு அறக்கட்டளைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் கூறியுள்ளது ஏற்கத்தக்கது அல்ல. சட்டரீதியாக தங்களுக்கு ஏதேனும் முத்து இல்லம் குறித்து பாத்தியதை இருப்ப தாக கூறினால் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் செல்வதற்கு பதிலாக அறக் கட்டளை சொத்துக்கும் அதன் அனுபவ உரிமைக்கும் குந்தகம் ஏற்படுத்தும் முறையில் சட்டத்துக்கு புறம்பான வழி களில் ஈடுபடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் நடவடிக்கை சரியானது அல்லஎன்றார். 

தருமபுரியில் ஏப்.20 மாநாடு

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், தருமபுரி மாவட்டம் கடுமை யான வறட்சி பாதித்த மாவட்டமாகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக  மொரப்பூரை கருப்பு பகுதியாக அரசு அறிவித்துள்ளது. மாவட்டத்தின் பிர தான தொழில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலாகும். விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால் விவ சாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை. மழைகாலங்களில், காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீர் பயனின்றி  கடலில் கலக்கிறது. இதனால் தருமபுரி மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வறண்டுள்ள நிலையில், காவிரி ஆற்றின் உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்புவதன் மூலம் விவசாயம் நடைபெறும் மக்கள் பயன் பெறுவார்கள் எனவே காவிரி ஆற்றின் உபரி  நீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் நடைபயண பிரச்சாரம் நடத்தியது தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் காவிரி உபரிநீர் திட்டத்திற்கு நதி ஒதுக்கீடு இல்லாதது மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று தருமபுரியில் ஆயத்த  மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருதஷ்ணன் பங்கேற்க்க உள்ளார். இம்மாநாட்டிற்க்கு மாவட்ட மக்கள்  ஆதரவை தந்து பங்கேற்க வேண்டும் என்றார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், சிபிஎம் மூத்த தலைவர் பி.இளம்பரிதி, முத்து நினைவு அறக்கட்டளை தாரர்களும், முத்துவின் வாரிசுதாரர்களான  கல்யாணசுந்தரம்  மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.மீனாட்சி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

;