tamilnadu

img

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

புதுதில்லி, ஆக. 4 - ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும்- மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81. சிபு சோரன் உடல்நலக்குறை வினால் புதுதில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை (ஆக. 4) அன்று காலமானார். அவரின் மறைவுக்கு நாடு முழு வதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரு கின்றனர். சிபு சோரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த நிலை யில், அவருக்கு இரங்கல் தெரி விக்கும் விதமாக, திங்கட்கிழமை நாள்  முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தில்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் சிபு சோரன் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், சிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் முக்கியமான வர் சிபு சோரன்.   சுமார் 40 ஆண்டு களுக்கும் மேலாக அரசியலில் ஈடு பட்டிருந்த சிபு சோரன், 3 முறை ஜார்க் கண்ட் மாநிலத்தின் முதலமைச்ச ராகவும், 8 முறை மக்களவை, 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.