tamilnadu

img

பழங்குடியினர் பகுதி கோயில்களுக்கு ரூ. 50 கோடி நிதி: முதல்வர் வழங்கினார்

சென்னை,ஜூலை 10- பழங்குடியினர் வசிக் கும் பகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி களை மேற்கொள்ள ரூ.50  கோடிக்கு வரைவோலை களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (ஜூலை 10) தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2022-2023 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள 1,250 ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும்  1,250 கிராமப்புறத் திருக் கோயில்களில் திருப் பணிகள் மேற்கொள்ள ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடியை வழங்கிடும் அடையாளமாக 20 திருக் கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருக் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள வரை வோலைகள் வழங்கினார். இந்து சமய அறநிலை யத்துறை தனது கட்டுப் பாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த கோயில்கள் பழமை மாறாமல் புனர மைத்து குடமுழுக்கு நடத்துதல். திருக்குளத் திருப்பணி, திருத்தேர் திருப்பணி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற் கொண்டு வருகிறது. மேலும்  சட்டமன்றத்தில் வெளியிடப் பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இதன்மூலம் அறநிலை யத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள கோயில் கள் மட்டுமின்றி, கட்டுப் பாட்டில் இல்லாத திருக் கோயில்களில் திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும்.  இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செய லாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும்  அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், சிறப்பு பணி  அலுவலர் ெஜ.குமரகுரு பரன், ஆணையர் க.வீ.முரளீ தரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.