பழங்குடி முதியவர் மாரிமுத்து மரணத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்குக!
சென்னை, ஆக. 2 - வனத்துறையினர் விசாரணை யின் போது, அடித்துக் கொல்லப் பட்ட பழங்குடி முதியவர் மாரிமுத்து வின் குடும்பத்திற்கு, ரூ. 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநி லத் தலைவர் பி. டில்லிபாபு, பொதுச் செயலாளர் இரா. சரவணன் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் குறுமலை செட்டில் மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (58). பழங்குடி முதியவ ரான இவரிடம், புலியின் பல் போன்ற பொருள் இருந்ததாக கூறி, கேரள கலால் துறையினர் கைது செய்து, தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள், மாரி முத்துவை உடுமலைப்பேட்டை வனச் சரக அலுவலகத்திற்கு விசார ணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் 31.7.2025 அன்று காலை, மாரிமுத்து வனச்சரக அலுவ லகத்தின், ஓய்வு அறையில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மாரிமுத்து வனச்சரக அலு வலகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பழங்குடி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் மீது 2017-இல் வனத்துறையால் கஞ்சா வழக்கு பதியப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு தான், அவர் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது. மாரிமுத்து மீது புனையப்பட்ட பொய் வழக்கில் அவரை விடுதலை செய்ததால் ஆத்திரத்தில் வனத் துறையினர் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த திட்ட மிட்ட கொலையை தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் வனத்துறையினர் மீது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து லாக்கப் மரணமாக விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மாரி முத்துவின் குடும்பத்தில் உள்ளவர் களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். கொடுஞ்செயலில் ஈடுபட்ட வனத் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.