மதுரை, ஜூன் 16- கடந்த வாரம் கோவை யில் நடத்தப்பட்ட சோதனை யைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் தேசிய விசா ரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கை ஈஸ்டர் வெடி குண்டு தாக்குதலுக்கு மூளை யாக செயல்பட்ட பயங்கர வாத அமைப்பை சேர்ந்த மத குரு ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தொடர்பு கொண்டிருந் தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 12ந்தேதி கேரள மாநி லம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட் டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடை த்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், ஷாஜகான் (25), முகமது உசேன்(25) மற் றும் ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பறி முதல் செய்யப்பட்ட ஆவ ணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை யில் அவர்கள் ஐ.எஸ். ஆத ரவாளர்கள் என்ற குற்றச் சாட்டு நிரூபணமானது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் இந்நிலையில் கடந்த வாரம் கோவையில் நடத்தப் பட்ட சோதனையைத் தொட ர்ந்து தற்போது மதுரை யிலும் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதி காரிகள் சோதனையில் ஈடு பட்டு உள்ளனர். மதுரை வில்லாபுரம் பகு தியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் விசாரணை நடத் தினர்.