tamilnadu

img

திருவாரூர் செவிலியருக்கு ‘பிளாரன்ஸ் நைடிங் கேல்’ விருது

திருவாரூர், டிச.8 - சிறப்பாக பணிபுரியும் செவிலியர்களுக்கு 1973  ஆம் ஆண்டு முதல் “பிளா ரன்ஸ் நைட்டிங் கேல்” விருது  வழங்கப்பட்டு வருகிறது. அவரது 200-வது பிறந்த ஆண்டில் இந்திய அளவில் 51 செவிலியர்களுக்கு குடிய ரசுத் தலைவரால் 2020 ஆம்  ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்க ளில் திருவாரூரைச் சேர்ந்த மணிமேகலை என்பவரும் ஒருவராவார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், விசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை(38). இவரது கணவர் சுப்ராயன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை துவங்கிய மணிமேகலை, தற்போது சென்னை எழும்பூரில் உள்ள  குழந்தைகள் நல மருத்துவ மனையில் 17 ஆண்டுகளாக செவிலியர் பணியில் செய லாற்றி வருகிறார். இவரது சேவையை பாராட்டி, “பிளா ரன்ஸ் நைட்டிங் கேல்” தேசிய  விருது வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி  பாராட்டினார். பின்னர் அஞ்சல் மூலம் விருது அனுப்பி  வைக்கப்பட்டது. தேசிய விருது பெற்ற செவிலியர் மணிமேகலையை அனை வரும் பாராட்டி வருகின்றனர்.

;