புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்
சின்னாளப்பட்டி, அக்.23- திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும்பாறை அருகே அமைந்துள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் பெரு க்கெடுத்து ஓடுகிறது. சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக பெரும்பாறை, கானல்காடு, நேர்மலை, தடியன் குடிசை, கல்லக்கிணறு, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதி களில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. இங்கு இருந்து வரும் நீர் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காம ராஜர் அணைக்கு செல்கிறது. மழை தொடர்வதால் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இருப்பி னும், மதுரை, திண்டுக்கல், தேனி, வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கார், வேன், ஜீப், மோட்டார் சைக்கிள்களில் பெருமளவில் வருகை தந்தனர். அதிக நீர்வரத்து இருந்தபோதி லும், சிலர் ஆபத்தை பொருட்படுத்தா மல் நீர்வீழ்ச்சியில் குளித்தனர். அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் கவனமாக நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
