வெள்ள அபாய எச்சரிக்கை
புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர் மட்டம், தற்போது 116.75 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதி கரிக்கும் பட்சத்தில் கூடுத லாக தண்ணீர் திறக்கப்ப டும் என்று சாத்தனூர் உபகோட்டம் உதவி செயற் பொறியாளர் தெரிவித்து உள்ளார். இதையடுத்து தென்பெண்ணை ஆற்றங் கரையோரத்தில் உள்ள புதுச்சேரி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.