அபராதத்துடன் மீனவர்கள் விடுதலை
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ் வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடு தலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டியதாக கடந்த ஆக.9 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள் ளது. 6 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இந்திய மதிப்பில் தலா ரூ.87,000, ஒருவருக்கு ரூ.14,500 அபராதம் விதித்தது. பறிமுதல் செய் யப்பட்ட படகு தொடர் பான விசாரணைக்கு 2026 ஜனவரி 22 ஆம் தேதி உரிமையாளர் ஆஜ ராக வேண்டுமென உத்தர விட்டுள்ளது.